தற்போது வரை 103 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்க நிலையில்

தற்போது வரை 103 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்க நிலையில்-2 More GN Divisions Isolated-Increasing Total Isolated GN Divisions 103

இன்று (06) முற்பகல் 6.25 மணி முதல், நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள இரு கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நாட்டில் தற்போது 103 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்க நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்
நுவரெலியா மாவட்டம், கொத்மலை பொலிஸ் பிரிவில், பனம்கம்மன மற்றும் திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுபத்ராலங்கார ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

103 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்
அதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றின் 3ஆம் அலை பரவலைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி முதல் இதுவரை 103 கிராம அலுவலர் பிரிவுகள் படிப்படியாக முடக்கப்பட்டுள்ளன.

Thu, 05/06/2021 - 10:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை