50 வயதுக்கு மேற்பட்டோருக்கு பிரிட்டனில் 3ஆவது தடுப்பூசி

பிரிட்டனில் 50 வயதைத் தாண்டிய அனைவருக்கும் இலையுதிர் காலத்தில் 3ஆவது தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கிறிஸ்மசுக்குள் கொரோனா தொற்றை முற்றாகத் துடைத்தொழிக்கும் நோக்கத்தில் அந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

பிரிட்டனில் தற்போது, 2 முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக தி டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

முதல் திட்டத்தில், உருமாறிய புதிய வகை வைரஸை சமாளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் போடப்படுகின்றன. 2ஆவது நடைமுறையில், பிரிட்டனில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனெகா, பைசர், மொடர்னா ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன.

முதன் முதலில் தடுப்பூசி போடும் பணியைத் ஆரம்பித்த ஐரோப்பிய நாடு பிரிட்டனாகும்.

வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை குறைந்து வருவதால், அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன. வரும் 17 ஆம் திகதி, வெளிநாட்டுப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை பிரிட்டன் தளர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thu, 05/06/2021 - 13:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை