ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவி; மாவட்டத்தில் முதல் நிலை

கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் தொழிநுட்ப பிரிவில் முதல் நிலை பெற்ற மாணவி கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கி வருகின்ற ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியவராவார்.

பரீட்சை எழுதிவிட்டு தனது குடும்பத்தின் பொருளாதார சுமையை குறைக்க ஆடைத் தொழிற்சாலைக்கு பணிக்குச் சென்ற கிளிநொச்சி பரந்தன் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் கயலினி என்ற கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவியே இரண்டு ஏ, பி பெறுபேறுகளை பெற்று உயிரியல் தொழிநுட்ப பிரிவில் மாட்ட மட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளார். மூன்று சகோதரிகளை கொண்ட குடும்பத்தில் ஒருவர் திருமணம் செய்துள்ள நிலையில் இரண்டாவது சகோதரி யாழ்.பல்கலைகழகத்தின் தொழிநுட்டப பீடத்தில் கல்வி கற்று வருகின்றார். தந்தை கூலித் தொழில், தாய் வீட்டுப் பணி.

எனவேதான் 2020 உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு குடும்ப பொருளாதாரத்தை தனியே சுமந்து நிற்கும் தந்தைக்கு தோள் கொடுக்க ஆடைத் தொழிற்சாலைக்கு பணிக்குச் சென்றுள்ளார்.

பரீட்சை பெறுபேறு வெளிவந்த தினத்தில் கூட தனது ஆடைத் தொழிற்சாலை பணியை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய போதே பெறுபேறுகள் வெளிவந்த செய்தியை அறிந்து தனது பெறுபேறுகளை பார்த்ததாகவும் தெரிவித்த கயலினி. தற்போதும் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Thu, 05/06/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை