இனப்படுகொலையாக அமெரிக்கா அங்கீகாரம்; துருக்கி நிராகரிப்பு

1915 இன் ஆர்மேனிய படுகொலையை ஓர் இனப்படுகொலை என்று அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக ஜோ பைடன் உத்தியோகபூர்வமாக வர்ணித்துள்ளார்.

தற்கால துருக்கியின் மையமாகக் கொண்ட முன்னாள் உஸ்மானிய பேரரசின் இறுதிக் காலகட்டத்திலேயே இந்தக் கொலைகள் இடம்பெற்றன.

எனினும் இந்த விவகாரம் அதிக உணர்வுபூர்வமானதாக பார்க்கப்படுகிறது. இந்த அவலம் பற்றி துருக்கி கவலை கொண்டபோதும் இதனை ஓர் இனப்படுகொலை என்பதை நிராகரிக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் முடிவை துருக்கி முற்றாக நிராகரிக்கிறது என்று துருக்கி வெளியுறவு அமைச்சர் மவ்லுத் கவுசொக்லு கடந்த சனிக்கிழமை தெரிவித்தார். “எமது வரலாறு பற்றி எவரிடம் இருந்தும் பாடம் கற்கப்போவதில்லை” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தொடந்து அமெரிக்க தூதுவரை அழைத்த துருக்கி வெளியுறவு அமைச்சு இது பற்றி தனது அழுத்தமான பதிலை வழங்கியுள்ளது. நேட்டோ கூட்டணி நாடான துருக்கி உடனான உறவில் விரிசல் ஏற்படும் கவலை காரணமாக முந்தைய அமெரிக்க நிர்வாகங்கள் இனப்படுகொலை என்ற சொல்லாடலை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய படையிடம் கடும் தோல்வியை சந்தித்தது குறித்து கிறிஸ்தவ ஆர்மேனியர்களை துரோகிகளாக குற்றம்சாட்டிய உஸ்மானிய துருக்குகள், அவர்களை சிரிய பாலைவத்தின் வழியாக நாடுகடத்தினர். இதன்போது நூற்றுக்கணக்கான ஆர்மேனியர்கள் பட்டினி, நோயினால் உயிரிழந்ததோடு பலர் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Mon, 04/26/2021 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை