கொவிட்-19: பிரேசிலில் இம்மாதம் 68,000 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் கொவிட்–19 நோய்த்தொற்றால் இம்மாதத்தில் இதுவரை சுமார் 68,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

இம்மாதமே அங்கு நோய்ப்பரவலால் மிக அதிகமான மரணங்கள் நேர்ந்துள்ளன. மார்ச் மாதத்தில் நேர்ந்த 66,573 மரணங்களை விட இது அதிகம்.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 71,000க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. 3,076 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த இரு வாரங்களாக அங்கு நாள் ஒன்றுக்குச் சராசரியாக 60,000 பேருக்குப் புதிதாக நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அந்நாட்டில் தடுப்பூசி போடும் பணி மெதுவாகவே நடைபெறுகிறது. பிரேசிலில் நோய்த்தொற்றால் இதுவரை 380,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Mon, 04/26/2021 - 12:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை