வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இரு நாட்களுக்கு மூடப்படும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இரு நாட்களுக்கு மூடப்படும்-COVID19 Patient Identified-SLBFE Head Office Closed on Apr 27-28

- கொரிய வேலை வாய்ப்பு பிரிவு இயங்கும்
- விமான நிலைய அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளலாம்

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பத்தரமுல்லை, கொஸ்வத்தவில் உள்ள தலைமை அலுவலகம் நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த இரு தினங்களிலும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அலுவலகம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பான வகையிலான சூழலை ஏற்புடுத்தியதைத் தொடர்ந்து. ஏப்ரல் 29ஆம் திகதி மீண்டும் வழமை போன்று அதன் நடவடிக்கைகள் இடம்பெறும் என, பணியகம் அறிவித்துள்ளது.

ஆயினும் பணியகத்தின் பிரதான அலுவலகத்தின் முதலாவது மற்றும் இறுதி அனுமதிப் பிரிவு மற்றும் கொரிய வேலைவாய்ப்பு பிரிவுகள், மட்டுப்படுத்தப்பட்ட அலுவலர்களைக் கொண்டு இயஙகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தலாஹேன அலுவலகம் மற்றும் பிரதேச ரீதியிலான அலுவலகங்கள் மூடப்படாது என்பதுடன், அவ்வலுவலகங்கள் மூலம் வழமையான சேவைகளை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பணியகத்தின் விமானநிலைய கிளை இயங்கும் என்பதால், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பான பதிவுகளை அவ்வலுவலகத்தின் மூலமும் மேற்கொள்ள முடியும் என, பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Mon, 04/26/2021 - 13:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை