ஐ.நா தீர்மானத்தால் இலங்கைக்கு குந்தகம்

எனினும் வழமைபோல் அரசு நிராகரிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விவாதத்தில் நேற்று இலங்கை சார்பில் ஐ.நாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சி.ஏ.சந்திரபிரேமா கருத்துரைத்திருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானத்தை வழக்கம் போல இலங்கை நிராகரிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

இதேநேரம் இலங்கை தொடர்பான ஐ.நாவின் குறித்த தீர்மானம் இலங்கைக்கு குந்தகம் விளைவிக்கும் எனவும் அவர் இதன்போது எச்சரித்துள்ளார்.

இதேவேளை குறித்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த பிலிப்பைன்ஸானது, இலங்கைக்கு எதிரான குறித்த பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழர்களின் பிரச்சினையை ஆதரிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தெரிவித்திருந்தது.

அத்துடன் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

 

Wed, 03/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை