ஒரு இலட்சம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி

சந்தையில் அரிசியின் விலையை குறைப்பதற்கு வர்த்தகர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய தயாராக உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.  

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு மற்றும் அரிசியின் விலை அதிகரித்து வருகின்றமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.    அதற்கிணங்க ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

நாட்டில் அரிசி ஒரு கிலோவின் விலையை 100ரூபாவுக்குக் குறைவாக தக்க வைத்துக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்  

Tue, 03/16/2021 - 15:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை