இந்தோனேசியாவில் சிவப்பு நிற வெள்ளம்

பத்திக் தொழிற்சாலை ஒன்று வெள்ளத்தில் சிக்கியதால் இந்தோனேசிய கிராமம் ஒன்றில் வெள்ள நீர் சுவப்பு நிறமாக மாறியுள்ளது.

மத்திய ஜாவாவின் ஜெங்கோட் வீதிகளில் வெள்ளநீர் பரவியபோது அதில் பத்திக் தொழிற்சாலையின் சாயம் கலந்துவிட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் இரத்துச் சிவப்பில் மாறிய வெள்ளத்தின் படங்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளன. பகிரப்படும் புகைப்படங்களால் வதந்தி பரவிவிடுமோ என்று ஒருவர் அச்சம் தெரிவித்தார்.

பெக்கலோங்கன் என்ற இந்த ஊர் பத்திக் துணி உற்பத்திக்குப் பிரபலமானதாகும்.

பெக்கலோங்கன் பேரிடர் நிவாரணத் தலைவர் டிமாஸ் அர்கா யுதா, பகிரப்பட்ட புகைப்படங்கள் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்தினார்.

இந்தப் பகுதியில் மற்றொரு ஊரில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் பத்திக் தொழிற்சாலை சாயத்தால் பச்ச நிறமாக மாறியதாக ஊர் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்தாவில் பொழிந்த அதிதீவிர மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 43 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது. இந்தோனேசியாவில் அடிக்கடி மழை வெள்ளம் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று.

Mon, 02/08/2021 - 06:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை