சுதந்திர தின கொண்டாட்டம் நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

73ஆவது தேசிய சுதந்திர தின பிரதான வைபவத்தை சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி சுதந்திர சதுக்கத்தில நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சரும் தேசிய சுதந்திர சதுக்கத்தில் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டில் கொரோளா நிலைமை காணப்படுவதனால் சுகாதார வழிமுறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அதிதிகளல் அழைக்கப்பட்ட போதிலும் தேசத்தின் அபிமானத்தை காக்கும் வகையில் வழமைபோன்று எவ்வித குறைப்பாடுகளுமின்றி கம்பிரமானதாகவும் எளிமையான முறையிலும் நடத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு சகல அரசாங்க, தனியார் நிறுவனங்களிலும் வீடுகளிலும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஏழாம் திகதி வரையான ஒரு வார காலம் தேசிய கொடிகளை பறக்கவிடுமாறும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்.

73ஆவது தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்திலிருந்து சூம் தொழில்நுட்பம் ஊடாக நேற்றுக் காலை (01) நடைபெற்றது.

ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ மற்றும் முப்படைகளின் பேச்சாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் உரையாற்றுகையில் :-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்வில் வழக்கம் போன்று முப்படைகள் மற்றும் பொலிஸாரின் மரியாதை அணிவகுப்பும், கலாச்சதர நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இம்முறை சுதந்திர தின பிரதான அணிவகுப்பில் முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்களில் இராணுவத்தைச் சேரந்து 3153 பேரும், கடற்படையைச் சேர்ந்த 821 பேரும், விமானப் படையைச் சேர்ந்த 740 பேரும் பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையைச் சேர்ந்த பேரும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 457 பேரும் அடங்குவர் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

இது தவிர கலை கலாச்சார மற்றும் பாரம்பரிய நிகழ்வில் 340 இளைஞர், யுவதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இம்முறை சர்வமத ஆசிர்வாதங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பங்குபற்றுதலுடன் பெப்ரவரி 02ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் பிரித் நிகழ்வும், 03ஆம் திகதி மருதானை ஸ்ரீலங்கா பிரிவனாவிலும் நடைபெறவுள்ளது. அத்தும்ன பெப்ரவரி 04ஆம் திகதி பௌத்த மத அனுஷ்டானம் நாரஹேன்பிட்டிய அபயராமயிலும், இந்து மத அனுஷ்டானம் கொழும்பு – 04 பம்பலபிட்டி புதிய கதிரேசன் கோயிலும், இஸ்லாமி சமய நிகழ்வு கொழும்பு – 04 நிமல் வீதியிலுள்ள மஸ்ஜிதுல் கைராத் ஜூம்ஆ பள்ளிவாசலிலும், கத்தோலிக்க தேவ ஆராதனை சியலு சான்த்துவரயன்கே தெவாலயத்திலும் கிரிஸ்தவ தேவ ஆராதனை கொழும்பு – 6 சோனக தெருவிலுள்ள மெதடிஸ் தேவாலயத்திலும் நடைபெறவுள்ளது.

இம்முறை சுதந்திர தின நிகழ்வில் மற்றும் மரியாதை அணிவகுப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் பீசிஆர் அல்லது என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்த அவர் இது தொடர்பில் எவரும் பயப்பட தேவையில் சுகாதார பாதுகாப்பிற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது இதன் உண்மை நிலை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்விக்கு பதிலளித்து பாதுகாப்புச் செயலாளர் :-

இது தொடர்பில் எந்தவித அச்சமும் தேவையில்லை சிவில் பாதுகாப்பு படையினர் சிலருக்கு ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இவர்களின் ஆரம்ப தொடர்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே அடையாளங் காணப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனெனில் சகல சந்தர்பங்களிலும் மாற்று வழிமுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவத்த அவர் சகல படைகளிலும் மேலதிக படைவீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

அத்துடன் இங்கு சகல சந்தர்பங்களிலும் சுகாதார நடைமுறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது ஆசனங்களுக்கு இடையில் இடைவெளி பேணப்பட்டுள்ளது. சகலரும் கண்டிப்பான முகக்கவசம் அணிய தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, இம்முறை பொது மக்கள் நேரடியாக வருகை தந்து பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றார்.

இதேவேளை, இம்முறை தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இசைக்கப்படுமா என மற்றுமொரு ஊடகவியலாளர் எழுப்பி கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர் பிரதான வைபவத்தில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கப்படும் என்றார்.

அத்துடன் இம்முறை தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி எண்ணக்கருவிற்கு அமைய நாடளாவிய ரீதியில் மர நடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் மாவட்ட, பிரதேச செயலாளர்களுக்கும் கிராம சேவகர்களுக்கும் அறிவிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தற்போது பயன்படுத்தப்படும் தேசிய கொடியில் சில குறைப்பாடுகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது இம்முறையும் அதேதேசிய கொடி பயன்படுத்தப்படுமா என ஊடகவியலாளர் எழுப்பி கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர் தற்போது பயன்படுத்தப்படும் தேசிய கொடியிலுள்ள சிங்கத்தில் சில மாற்றம் உள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் முன்வைக்கும் ஆலோசனைகள் எதிர்காலத்தில் கருத்திற் கொள்ளப்பட்டு அது நிபுணர்கள் குழுவினால் ஆராயப்பட்டு பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்ட பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் அது வரைக்கும் தற்கோதைய தேசிய கொடியே பயன்படுத்தப்படும் என்றார்.

ஸாதிக் ஷிஹான்

Tue, 02/02/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை