சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம்

- பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவிப்பு

இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமை காரணமாக, இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் அனைத்து படையினரும் பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பரிசோதனை அறிக்கைகள் ஒழுங்காக இருந்தால் மாத்திரமே படையினர் அணிவகுப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏனைய விருந்தினர்களின் அளவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சுகாதார வழிகாட்டல்கள் முழுமையாகப் பேணப்பட்டு இந்நடவடிக்கைகள் யாவும் முன்னெடுக்கப்படும் எனவும் தெதரிவித்தார்.

எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி, கொழும்பு 07 இல் உள்ள சுதந்திர சதுக்கத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

Tue, 02/02/2021 - 07:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை