பிரிட்டனில் கால்பங்கினருக்கு தடுப்பு மருந்து போடப்பட்டது

பிரிட்டனில் கால் பங்கினருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான முதல் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாக அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பிரிட்டனில் உள்ள 67 மில்லியன் பேரில் சுமார் 15 மில்லியன் பேருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

எளிதில் பாதிக்கப்படும் அபாயமுள்ள 75 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், மூத்தோர் இல்லங்களில் வசிப்போர், வேலை செய்வோர் ஆகியோருக்குத் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

பிரிட்டனில் நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களில் 90 வீதத்தினர் முன்னுரிமை அளிக்கப்பட்ட அந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அதிகாரிகள் கூறினர்.

ஐரோப்பாவிலேயே வைரஸ் தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக பிரிட்டன் உள்ளது. அங்கு நாலு மில்லியனுக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 117 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Tue, 02/16/2021 - 09:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை