ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்கான தயார்படுத்தல் பயிற்சிகள் ஆரம்பம்

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலுக்கமைய முன்னெடுக்கப்படும் ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்கான தயார்படுத்தல் பயிற்சியான‘ஹர்மடான் -3’ கள பயிற்சிகள்,12 ஆம் திகதி யாழ்ப்பாணம் மயிலடி பகுதியில் ஆரம்பமானது.

இந்த ஐந்துநாள் பயிற்சிகள் யாழ்ப்பாணத்திலிருந்து மின்னேரியா வரையிலான 457.2 கிலோமீற்றர் தூரத்துக்கு முன்னெடுக்கப்பட உள்ள நிலையில் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை 158 கிலோ மீட்டர் தூரம் பயணித்து நாயாறு பகுதியை அமைதிகாக்கும் படையினர் சென்றடைந்தனர்.

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளின்போது மாலி மற்றும் காவோ பிரதேசங்களில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையினரால் முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் தொடர்பான முன்பயிற்சிகளை வழங்கும் நோக்கிலேயே இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆரம்ப கள பயிற்சியில் கஜபா படையணி, இலங்கை படைக்கலச் சிறப்பணி, சமிக்ஞை படையணி, இயந்திரவியல் படையணி, பொறியியல் சேவை படையணி, இலங்கை இராணுவ சேவை படையணி, இராணுவ வைத்தியப்படையணி, இலங்கை உபகரணப் படையணி, இலங்கை மின்னியல் மற்றும் பொறியியல் படையணி, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி, இராணுவ பொதுச் சேவைப் படையணியை பிரதிநிதித்துவப்படுத்தி 20 அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாய்கள் 223 பேரும் கலந்து கொண்டனர்.

கவச வாகனங்கள் 06, யுனி பபல் ரக வாகனங்கள் 06, பொருள்கள் விநியோகத்துக்கான 19 வாகனங்கள் உள்ளடங்களாக 47 இராணுவ வாகனங்கள் இந்த களப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அதன்படி ஹர்மடான்-3 களப் பயிற்சிக்கான வாகனங்கள், மயிலடி, பருத்தித்துறை, நகர்கோவில்,வெத்தலகேணி, பரந்தன் விஸ்வமடு, புதுகுடியிருப்பு, முல்லைத்தீவு, நாயாறு,வெலிஓயா,பதவிய, புல்மோட்டை, தாவல் குளம்,கோமரங்கடவல, திருகோணமலை, கிண்ணியா, மூதூர் சேறுநுவர, கந்தகாடு, புலத்சிகம,பொலன்னறுவை,கிரிதளை ஊடாக இன்று மின்னேரியா காலாட் படை பயிற்சிப் மையத்தை சென்றயும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 02/16/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை