தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுக்க போராடியவர் அலவி
- இன்று 89வது பிறந்த தினம்
மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த அலவி மௌலானா மறைந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. அவர் இனமத பேதமின்றி தேசத்திற்கு சேவை செய்துள்ளார். இன்று ஜனவரி முதலாம் திகதி அவரது 89 வது பிறந்த நாள் ஆகும்.
அவர் ஆளுநர் பதவி வகித்த போதிலும், தொழிலாளர் வர்க்கத்திற்கு சேவை செய்வதிலிருந்து தயங்கவில்லை. மேல் மாகாண ஆளுநராகவும்,சுதந்திரக் கட்சியின் மூத்த துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர் அலவி மௌலானா.
அலவி மௌலானா ஒரு தொழிற்சங்கவாதி ஆவார். அவர் எந்தப் பதவியில் இருந்தாலும், ஒருபோதும் தொழிலாள சமூகத்தை மறந்து விடவில்லை, அவர்களின் உரிமைகளுக்காக எப்போதும் போராடினார். மேலும் உழைக்கும் கரங்களின் மகிமையை பற்றி எப்போதும் பேசுவார்.
தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளைப் பாதுகாக்க போராட்டங்களை நடத்தும் போது அவர் எப்போதும் முன்னணியில் இருந்தார். அலவி மௌலானா லிப்டன் சுற்றுவட்டம் அல்லது கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கேற்பதைப் பார்ப்பது அனைவருக்கும் பொதுவான காட்சியாகும். மக்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் தனித்துவமான திறமை அவருக்கு இருந்தது. ஒரு பணியிடத்தில் சர்ச்சை குறித்து புகாரளிக்கப்படும் போது, எத்தகைய பதற்றமான சூழ்நிலையையும் சமாளிக்கும் அற்புதமான திறனைக் கொண்டிருந்தார் அவர்.
ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி மக்களை வழிநடத்தவும் ஒழுங்கமைக்கவும் அவருக்கு திறன் இருந்தது. இவர் செய்த சேவைகளை சு.கவினர் எப்போதும் மிகுந்த நன்றியுடனும் மரியாதையுடனும் நினைவில் வைத்திருப்பார்கள்.தொழிலாளர் வர்க்கத்திற்கு அதிகபட்ச நன்மைகளைப் பெற அவர் தனது காலத்தை அர்ப்பணித்துள்ளார்.
தொழிலாள வர்க்கத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றி, இவர் எப்போதும் தேசத்திற்கு சேவை செய்ய முன்வந்துள்ளார். ஸ்ரீ.ல.சு.கவில்1956 இல் இணைந்து கொண்ட சிலரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில்மியா யூசுப்
from tkn
Post a Comment