கொரோனா வைரஸ் தீவிர பரவல்; கொழும்பில் மாத்திரம் 18,000 தொற்றாளர்கள்

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 639 பேரில் 133 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் கொவிட் – 19 இரண்டாவது அலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது.

இதனைத் தவிர்த்து நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் 190 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவிசாவளை ஆடைதொழிற்சாலையில் 83 பேர் தொற்றாளர்களாக அடையாளம் மேற்படி கைதிகள் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அங்கு அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பொலனறுவை குரோனா வைரஸ் தொற்று மத்திய நிலையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி சிறைக்கைதிகள் 5 பேரும் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும்

அவர்கள் 52, 32, 26, 23, 22 வயது டையவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஒரு சிறைக்கைதி நேற்று பிற்பகல் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 22 வயதான சிலாபம் தெமட்டபிட்டிய பகுதியில் அவரது உறவினர் ஒருவரது வீட்டில் மறைந்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Fri, 01/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை