கிழக்கில் 1200ஐத் தாண்டிய கொரோனா தொற்று!

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்களின் எண்ணிக்கை நேற்றையதினம் 1200ஐத் தாண்டியது. புத்தாண்டில் கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமாகிவருகின்றது. அங்கு நேற்றுவரை 1209 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இத்தரவுகளை கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதமிருந்து பேலியகொடை மூலமாக இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 212 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 809 பேரும் திருமலை மாவட்டத்தில் 135 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 30 பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர். கல்முனையில் கண்டுபிடிக்கப்பட்ட 809 தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பையடுத்தே கிழக்கின் நிலைமை இவ்விதம் அதிகரித்துள்ளது.

கல்முனை தெற்கில் 186 பேரும் காத்தான்குடியில் திடீரென 69 பேரும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நிலைமை மோசமாகியது.

இதுவரை சம்மாந்துறை, ஒலுவில், சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, வவுணதீவு மற்றும் காத்தான்குடியிலுமாக மொத்தம் 06 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.

கல்முனை பிராந்தியத்தில் 809. கல்முனைப் பிராந்தியத்தில் 809 ஆக தொற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. இப்பிராந்தியத்துள் வரும் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை 771 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதில் அக்கரைப்பற்று 306 அடுத்ததாக கல்முனை தெற்கு 186 தொற்றுக்கள் பொத்துவில் 76, அட்டாளைச்சேனை 71, சாய்ந்தமருது 37, ஆலையடிவேம்பு 31, இறக்காமம் 23, சம்மாந்துறை 17, கல்முனை வடக்கு 1, திருக்கோவில் 15, நிந்தவுர் 13, காரைதீவு 13 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

பிராந்தியத்தில் 10க்கு குறைந்த எண்ணிக்கையுடைய ஒரேயொரு சுகாதாரப்பிரிவு நாவிதன்வெளிப் பிரிவு. அங்கு இதுவரை ஆக 07 தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை கல்முனை மாநகர எல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 2367 தொற்றுக்களாக அதிகரித்திருக்கிறது.

காரைதீவு குறூப் நிருபர்

Sat, 01/02/2021 - 12:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை