உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் பாரதூர சூழ்ச்சிகள்

விரைவில் வெளிச்சத்துக்கு வரும் −வாசுதேவ

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் பாரதூரமான சூழ்ச்சிகள் இருந்துள்ளன. அந்தச் சூழ்ச்சிகளின் அடிமுடி இன்னும் வெளியாகவில்லை. எதிர்காலத்தில் அவை வெளிவருமென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு - செலவுத் திட்டத்தின் நீதி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எம்.சீ.சீ ஒப்பந்தத்தை கையெழுத்திட வேண்டுமென்ற அவசரத்தின் பின்னணிகள் தொடர்பாக ஆராய்ந்தால் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை கண்டு பிடிப்பது கடினமானதாக இருக்காது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் பாரதூரமான சூழ்ச்சி இருந்துள்ளது. இதனை எல்லோரும் கூறுகின்றனர். அந்தச் சூழ்ச்சியின் அடிமுடி இன்னும் வெளியாகவில்லை. அது வரும்காலத்தில் வெளிவரும்.

அதில் வெளிப்படுத்தப்பட வேண்டுமென்றால் எம்.சீ.சீ ஒப்பந்தம் மற்றும் அதனை கையெழுத்திட இருந்த அவசரம், அதற்கான பின்னணி என்னவாக இருந்திருக்க வேண்டுமென்று சிந்தித்துப் பார்த்தால் இதில் பிரதானமானவர் யார் என்பதை தெரிந்துகொள்வது கடினமானதாக இருக்காது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 12/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை