2021 வரவு – செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு இன்று

2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை 05.00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறும்.

2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த மாதம் 17ஆம் திகதி பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்சவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

18, 19, 20, 21ஆம் திகதிகளில் வரவு – செலவுத்திட்டத்தின் 02ஆம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது. அதன் பின்னர் நேற்றுவரையான 19 நாட்கள் அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பிலான குழுநிலை விவாதங்கள் இடம்பெற்றன.

பாதுகாப்பு, நீதி, மக்கள் பாதுகாப்பு, விவசாயம், கைத்தொழில், வர்த்தகம், கல்வி, நிதி மற்றும மத விவகாரங்கள் தொடர்பிலான அமைச்சுகள் மீது காரசாரமான விவாதங்களும் இம்முறை இடம்பெற்றிருந்தன.

மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு வரவு -செலவுத் திட்டத்தின் மூலம் தீர்வு வழங்கப்படும் என வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் உரையும் ஆற்றியிருந்தார். இன்று மாலை 05.00 மணிக்கு வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Thu, 12/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை