ரிஷாட் பதியுதீன் ஒரு மாதத்தின் பின் பிணையில் விடுதலை

ரிஷாட் பதியுதீன் ஒரு மாதத்தின் பின் பிணையில் விடுதலை-Rishad Bathiudeen-Arrested On October 19-Released On Bail-November 25

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், ஒரு மாதத்திற்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, 222 ​​இ.போ.ச. பஸ்கள் மூலம் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதியை செய்து கொடுத்தமை மற்றும் அதற்காக ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான அரசாங்க நிதியைப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கு இன்று (25) கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகெ முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் அவரை பிணையில் விடுவிக்கும் உத்தரவை வழங்கினார்.

இதன்போது, ரூபா ஒரு இலட்சம் ரொக்கம் மற்றும் ரூபா 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், பிணையாளர்கள் அவரது நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தார்.

அத்துடன், அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டதோடு, அது தொடர்பில் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் நீதவான் உ த்தரவிட்டார்.

மேலும், தேவையேற்படும் நிலையில், அறிவிக்கப்படும் வேளைகளில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னிலையாக வேண்டும் எனும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்கு பிணை வழங்க நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Wed, 11/25/2020 - 14:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை