சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டாம்

ஹரின் பெர்னாண்டோ எம்.பி

அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதால் சமூக ஊடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான முதல்நாள் குழுநிலை விவாதத்தில் ஜனாதிபதிக்கான செலவீனங்கள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

‘sir fail’ என சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் எதிர்க்கட்சியால் உருவாக்கப்படவையல்ல. அவை மக்கள் மத்தியிலிருந்து உருவான கருத்துக்களாகும்.

சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் மறைமுகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் விரகத்தியடைந்துள்ளனர். இக்கருத்துக்கள் மூலம் அது தெளிவாகத் தெரிகிறது. எதிர்காலத்திலும் கடுமையான விமர்சனங்களை சந்திக்க நேரிடும்.

கடந்த ஆட்சி சமூக வலைத்தளங்கள் மூலமாக கடுமையாக விமர்சிக்கப்பட்ட போதிலும், ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கம் கருத்து சுதந்திரத்துக்கு எந்தவொரு தடைகளையும் விதிக்கவில்லை. ஆகவே, சமூக ஊடங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்றார்.

Wed, 11/25/2020 - 13:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை