2021-ம் ஆண்டில் ஏப்ரல்-மே மாதங்களில் ஐ.பி.எல். போட்டிகள்

அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவர் கங்குலி உறுதி அளித்துள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். போட்டி ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும்.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல். போட்டி செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவர் கங்குலி உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ஐ.பி.எல். 2021 பருவகாலத்துக்கு போட்டிகள் ஏப்ரல்-மே மாதங்களில் உறுதியாக நடைபெறும். 2021-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் என்பதில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆண்டு மட்டுமே அங்கு நடத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா நடத்துகிறது. இதைபோல உள்ளூர் போட்டிகளும் விரைவில் தொடங்கப்படும். கொரோனா தடுப்புப் பாதுகாப்பு வளையம் அமைத்து போட்டிகள் நடத்தப்படும்.

இந்திய அணியில் விளையாட படிக்கலுக்கு வாய்ப்பு இருக்கிறது. அவர் ஒரு திறமையான வீரர். 20 ஓவர் போட்டி என்பது அவருக்கு முதல் கட்டம்தான். இன்னும் சில பருவகாலங்கள் போகட்டும். நிச்சயம் அணியில் இடம்பெறுவார். இந்தியாவுக்கு தொடக்க வீரர்கள் தேவைப்படுகிறார்கள்.

Mon, 11/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை