எத்தியோப்பிய போர்: 20,000 அகதிகள் சூடானில் தஞ்சம்

எத்தியோப்பிய நாட்டு எல்லைப் பகுதியில் மோதல் உக்கிரம் அடைந்துள்ள நிலையில் அண்டை நாடான சூடானில் அடைக்கலம் பெறும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு பரந்த ஆபிரிக்க கொம்புப்பிராந்தியத்தில் ஸ்திரமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.

எத்தியோப்பியாவின் வடக்கு டைக்ரே பிராந்தியத்தில் இருந்து சூடானை நோக்கி 20,000க்கும் அதிகமான அகதிகள் தப்பி வந்திருப்பதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டது.

டைக்ரே மாநில அரசுக்கும் எத்தியோப்பிய மத்திய அரசுக்கு இடையிலேயே தற்போது போர் மூண்டுள்ளது. இந்தப் பிராந்திய அரசான டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி கடந்த ஞாயிறன்று அண்டை நாடான எரிட்ரியாவின் தலைநகர் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்தப் போரில் எத்தியோப்பிய இராணுவத்துடன் சேர்ந்து எரிட்ரிய படையும் போரிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் எத்தியோப்பிய படைகள் டைக்ரே மாநில நகர் ஒன்றை கைப்பற்றியதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. அரலட்டா நகரில் இருந்து டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிப் படை தப்பியோடிவிட்டதாக அரசு குறிப்பிட்டுள்ளது.

 

Tue, 11/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை