பிரிட்டிஷ் பிரதமர் ஜோன்சன் தனிமைப்படுத்திக்கொண்டார்

பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வைரஸ் தொற்று உறுதியான ஒருவருடன் தொடர்பில் வந்ததால் அவர் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அவர் டவுனிங் ஸ்ட்ரீட்டிலிருந்து தமது பணியைத் தொடர்வார் என்றும் வைரஸ் தொற்றுக்கு எதிரான அரசாங்கத்தின் திட்டங்களை வழிநடத்துவார் என்றும் பிரதமர் அலுவலகம் கூறியது.

ஜோன்சனின் உடல்நலம் சீராக உள்ளது. அவருக்குக் வைரஸ் தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை என்று அது குறிப்பிட்டது. அவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரைச் கடந்த வியாழக்கிழமை சுமார் அரை மணி நேரத்திற்குச் சந்தித்தார்.

அந்தக் குழுவில் இருந்த ஒருவருக்கு வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டது.

அதைத் தொடர்ந்து சொந்தமாகத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தேசியச் சுகாதாரச் சேவை ஜோன்சனிடம் தெரிவித்தது. ஏப்ரல் மாதத்தில் ஜோன்சன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

 

Tue, 11/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை