மரண தண்டனையை எதிர்நோக்கும் பெண்

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 67 ஆண்டுகளில் முதல் முறையாக மத்திய அரசினால் பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

லிசா மொன்ட்கோமரி என்ற அந்தப் பெண் 2004 ஆம் ஆண்டு கர்ப்பிணி பெண்ணை கழுத்தை நெரித்து அவர் வயிற்றை வெட்டி குழந்தையை கடத்திச் சென்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

வரும் டிசம்பர் 8 ஆம் திகதி அவருக்கு இன்டியானாவில் விச ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

1953 ஆம் ஆண்டிலேயே மிசுரியில் பொனி ஹெடி என்ற பெண் ஒருவருக்கு அமெரிக்க அரசு கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றியது.

தவிர 1999 ஆம் ஆண்டு தமது இரு நண்பர்களைக் கொன்ற பிரன்டன் பெர்னார்ட் என்பவருக்கும் வரும் டிசம்பர் மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 10/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை