பாரிஸ் புறநகரில் ஆசிரியர் தலைத்துண்டித்து கொலை

பிரான்ஸில் ஆசிரியரின் தலையை துண்டித்துக் கொன்ற நபர் பாடசாலைக்கு வெளியில் காத்திருந்து தமது இலக்கை மாணவர்களுக்கு அடையாளம் காணும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொல்லப்பட்ட 47 வயது சாமுவேல் பெட்டி என்ற அந்த ஆசிரியரின் புகைப்படங்களை தாக்குதல்தாரி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ஆசிரியர் வகுப்பறையில் வைத்து இறைத்தூதர் தொடர்பான சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரத்தை மாணவர்களிடம் காட்டிய சம்பவத்தைத் தொடர்ந்தே இவ்வாறு கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தக் கொலையில் ஈடுபட்ட நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்படடுள்ளார். 18 வயதான அப்துலாக் என்ற கொலையாளி மொஸ்கோவில் பிறந்த செச்னிய பூர்வீகத்தைக் கொண்டவராவார். ஆசிரியர் வேலைசெய்த பாடசாலையில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் உட்பட 5 பேர், அந்தச் சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதுவரை, மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Mon, 10/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை