உலகில் கொரானா சம்பவங்கள் நாளுக்கு 400,000ஆக அதிகரிப்பு

புதிய மையமாக மாறும் ஐரோப்பா

உலகெங்கும் ஒரே நாளைக்குள் கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை முதல் முறை 400,000 ஐ தாண்டியிருப்பதோடு ஐரோப்பாவில் நோய்ப் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றின் முதல் கட்ட அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய ஐரோப்பா, அண்மைய வாரங்களில் புதிய மையப்புள்ளியாக மாறியுள்ளது. அங்கு கடந்த வாரத்தில் நாளுக்கு சராசரியாக 140,000 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஒரு பிராந்தியமாக ஐரோப்பாவில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசிலின் மொத்த எண்ணிக்கையை விடவும் அதிக தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இதன்படி உலகில் அடையாளம் காணப்படுகின்ற ஒவ்வொரு 100 தொற்றாளர்களில் 34 பேர் ஐரோப்பியர்களாக இருப்பதாக ரோய்ட்டர்ஸ் புள்ளிவிபரம் குறிப்பிடுகிறது. இந்த பிராந்தியத்தில் தற்போது ஒவ்வொரு ஒன்பது நாட்களுக்கு ஒரு மில்லியன் தொற்றாளர்கள் என அதிகரித்திருப்பதோடு இந்த பெருந்தொற்று ஆரம்பித்தது தொடக்கம் அங்கு மொத்த தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 6.3 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.

பிரதான ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் ஐரோப்பாவின் புதிய தொற்றுச் சம்பவங்களில் பாதியை பெற்றுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் பிரான்சில் அதிகபட்சமாக நாளுக்கு சராசரியாக 19,425 நோய்த் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு இதற்கு அடுத்து பிரிட்டன், ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளன. பிரான்சில் கடந்த சனிக்கிழமை முன்னெப்போது இல்லாத அளவுக்கு ஒரு நாளைக்குள் 32,427 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பல ஐரோப்பிய நாடுகளும் பாடசாலைகள் மூடி, சமூக செயற்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை இறுக்கியுள்ளன.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் எட்டு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருப்பதோடு பிரிட்டன் தலைநகர் லண்டனிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முதலாவது கொரானா அலையால் மோசமாக பாதிக்கப்பட்ட இத்தாலியில் நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருப்பதோடு அதற்கு அடுத்து இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் காணப்படுகின்றன.

Mon, 10/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை