கதவு பழுது: நாசா விண்கலத்தில் இருந்து பாறை துகள்கள் கசிவு

பூமியிலிருந்து மில்லியன் கணக்கான கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பென்னு எனும் குறுங்கோளுக்கு அனுப்பப்பட்ட நாசா விண்கலமான ஒரிசிஸ் –ரெக்ஸ் சேகரித்த பாறைத் துகள்களை இழந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விண்கலம் மாதிரி பாறைத் துகள்களை எடுப்பதற்காக அனுப்பப்பட்டது. இருப்பினும் அது அளவுக்கு அதிகமாக மாதிரி துகள்களை சேகரித்துள்ளது.

60 கிராம் மாதிரிகளே தேவைப்பட்டபோதும் அது சுமார் 400 கிராம் துகள்களை எடுத்த நிலையில், கல் ஒன்று கலனின் கதவில் மாட்டிக்கொண்டுள்ளது.

கதவு சரியாக மூடப்படாத நிலையில், குறுங்கோளின் மாதிரி துகள்கள் விழுகின்றன. எவ்வளவு துகள்கள் இழக்கப்பட்டுள்ளன என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.

மாதிரி துகள்களை சேகரிக்கும் பணியில் உள்ள குழுவினர், தற்போது எஞ்சிய பாறைத் துகள்களை பாதுகாப்பதற்கு முனைகின்றனர்.

அந்தத் துகள்கள் சூரிய மண்டலம் உருவான காலக்கட்டத்தைச் சேர்ந்தவை எனக் கூறப்படுகிறது. மாதிரித் துகள்கள் மூலம், சூரிய மண்டலம் எவ்வாறு உருவானது என்பதை அறியலாம் என்று நம்பப்படுகிறது.

2016ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட விண்கலம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பூமிக்குத் திரும்பவுள்ளது.

Mon, 10/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை