அமெரிக்காவில் புதிய உச்சத்தை தொட்டது கொரோனா தொற்று

அமெரிக்காவில் நாள்தோறும் அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அங்கு கடந்த சனிக்கிழமை மேலும் 88,973 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் புதிய நோய்த்தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளியன்று அங்கு சுமார் 80,000 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டது. வரும் நாட்களில் நோய்த்தொற்று அதிகரிக்கக் கூடுமென அஞ்சப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அன்றாடம் பதிவாகும் வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

தற்போது நாட்டின் மத்திய மேற்குப் பகுதியிலும் வடக்குப் பகுதியிலும் புதிய வைரஸ் தொற்றுச் சம்பங்கள் அதிகரித்து வருகின்றன.

உலகிலேயே அமெரிக்காவிலேயே மிக அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.56 மில்லியனுக்கு மேலாகும். உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 225, 000ஆக உள்ளது. 

 

Mon, 10/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை