கொவிட்-19: ஐரோப்பாவில் கால் மில்லியன் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் கால் மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்த இரண்டாவது பிராந்தியமாக ஐரோப்பா உருவெடுத்துள்ளது.

லத்தீன் அமெரிக்கா, அந்த எண்ணிக்கையை எட்டிய முதல் பிராந்தியமாகும்.

ஜெர்மனியில் கடந்த சனிக்கிழமை மரண வீதம் பத்தாயிரத்தைத் தாண்டியது. ஸ்பெயினிலும் பிரான்ஸிலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியது.

பிரான்ஸில் சுமார் 46 மில்லியன் பேர் இரவு நேரக் கட்டுப்பாட்டைப் பின்பற்றி வருகின்றனர். அவசர நிலையை அறிவிப்பதுபற்றி ஸ்பெயின் ஆலோசித்து வருகிறது.  

ஐரோப்பாவில் தினசரி தொற்று எண்ணிக்கை கடந்த வியாழக்கிழ 200,000 ஆக அதிகரித்தது. பல தெற்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஒற்றை நாளில் அதிக தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

உலக கொரோனா தொற்று சம்பவங்களில் 22 வீதம் ஐரோப்பாவில் பதிவாகி இருப்பதோடு 19 வீத உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.

 

Mon, 10/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை