அமெரிக்க தேர்தல்: வாக்களிப்பு தீவிரம்

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இந்த மாநிலத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் கூட்டியே வாக்களிக்கும் முறை கடந்த வியாழக்கிழமை ஆரம்பமானது. வாக்காளர்கள் அதிகாலையிலேயே திரண்டு வந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்தபடி வாக்கு அளித்தனர்.

இந்த மாகாணத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் செனட் உறுப்பினரையும் தேர்ந்தெடுக்க வாக்களிக்கின்றனர். இதுவரை அமெரிக்காவில் 14.6 மில்லியன் மக்கள் அஞ்சல் மூலமாகவும், நேரிலும் வந்து வாக்களித்துள்ளனர்.

Sat, 10/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை