நியூசிலாந்தில் இன்று தேர்தல்

நியூசிலாந்தில் இன்று சனிக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

எதிர்த்தரப்புத் தேசியக் கட்சியைக் காட்டிலும், பிரதமர் ஜசிண்டா ஆர்டனின் தொழிலாளர் கட்சி 15 புள்ளிகள் முன்னிலை வகிப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

கொரோனா வைரஸ் பரவலைச் சமாளிப்பது, கிரைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டைக் கையாண்ட விதம் ஆகியன பற்றிப் பல தரப்பினரும் ஆர்டனைப் பாராட்டினர்.

தேசியக் கட்சித் தலைவர் ஜுடித் கோலின்ஸுடன் நடத்தப்பட்ட தேர்தல் நேரடி விவாதத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

நியூசிலாந்தில் சொத்து வரி அறிமுகம் செய்யப்படலாம் என்று கோலின்ஸ் கூறியதற்கு, அவ்வாறு இல்லை என்று ஆர்டன் உறுதியாய் மறுத்தார்.

Sat, 10/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை