பெரும் விண்வெளிக் குப்பைகள் மோதும் அச்சுறுத்தல் விலகியது

மோதும் அபாயம் இருந்த இரு விண்வெளி குப்பைகள் ஆபத்து இன்றி விலகிச் சென்றிருப்பதாக விண்வெளி ரேடார் இயக்குபவர்களான லியோலெப்ஸ் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் செயலிழந்த செய்மதி மற்றும் சீன ரொக்கெட் உடல் ஒன்றே மோதும் வகையில் நெருங்கி வந்தன. எனினும் இந்த இரண்டும் 25 மீற்றர் வரை நெருங்கி வந்து விலகிச் சென்றிருப்பதாக லியோலெப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டும் மோதியிருந்தால் ஆயிரக்கணக்காக விண்வெளிக் குப்பைகள் உருவாக்கி விடும் என்று முன்னதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. எனினும் அன்டார்டிகாவுக்கு மேலால் விண்வெளி குப்பைகளுக்கான எந்த அடையாளமும் தெரியவில்லை என லியோலெப்ஸ் நிறுவனம் நேற்றுக் காலை தெரிவித்தது.

இந்த இரண்டு பொருட்களின் மொத்த எடை 2.5 தொன்களுக்கு மேல் இருக்கும் நிலையில் வினாடிக்கு 14.66 கிலோமீற்றர் வேகத்தில் மோதினால் பெரும் அழிவு ஏற்படும் என்றும் விண்வெளி குப்பை மழை ஒன்று உருவாகும் என்று முன்னர் எச்சரிக்கப்பட்டிருந்தது. அது செய்மதிகளின் செயற்பாடுகளுக்கும் தடங்கலை ஏற்படுத்த வாய்ப்பு இருந்தது.

Sat, 10/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை