ஜெரூசலத்தில் பிறந்த அமெரிக்கர் இஸ்ரேலில் பிறந்ததாக அங்கீகாரம்

ஜெரூசலத்தில் பிறந்த அமெரிக்கர்கள் அமெரிக்க கடவுச்சீட்டில் இஸ்ரேலில் பிறந்தவர்களாக அறிவிக்க முடியும் என்று அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஜெரூசலத்தில் பிறந்தவர்களின் பிறந்த நாடு அடையாளப்படுத்தப்படவில்லை. ஜெரூசலம் தொடர்பில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்களுக்கு இடையே முரண்பாடு இருக்கும் நிலையிலேயே அமெரிக்கா இத்தனை காலமும் அந்தக் கொள்கையை பின்பற்றி வந்தது.

எனினும் 2017 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஜெரூசலத்தில் இஸ்ரேலின் இறைமையை அங்கீகரித்த நிலையில் அதனை மேலும் பலப்படுத்துவதாக இந்த புதிய அறிவிப்பு வந்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலம் தமது எதிர்கால தலைநகர் என்று பலஸ்தீனர்கள் கூறி வருகின்றனர்.

எனினும் ஜெரூசலம் நகரின் உரிமை இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்களுக்கு இடையிலான மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்த நகரின் அந்தஸ்துப் பற்றி உடன்பாடு ஒன்றுக்கு வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 10/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை