அமெரிக்காவில் ஒரே நாளில் 91,000 பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 91,295 பேருக்கு கொவிட் –19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 90,000க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்படுவது இதுவே முதல்முறை. ஜோன் ஹொப்கின்சன் பல்கலைக்கழகம் அந்தத் தகவலை வெளியிட்டது.

இம்மாதப் பிற்பாதியிலிருந்து அமெரிக்காவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் நோய்த்தொற்றுக்கு ஆளானோர் அதிகமுள்ள நாடு அமெரிக்காவாகும்.

அங்கு வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 9 மில்லியனை நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,021 ஆக பதிவானது. இதன்மூலம் அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 228,625 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன் கடந்த சனிக்கிழமை 88,973 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவானதே ஒருநாளில் அதிகமாக இருந்தது.

Sat, 10/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை