இளைஞர்களிடையே கிட்டுவதில் தாமதம்

ஆரோக்கியமான இளைஞர்களுக்கு 2022ஆம் ஆண்டு இறுதி வரை கொவிட்–19 நோய்க்கான தடுப்பு மருந்து கிட்டாமற்போகலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

சுகாதார அதிகாரிகள், முன்னிலை ஊழியர்கள், முதியவர்கள் ஆகியோருக்குத் தடுப்பு மருந்தைப் பெறுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமினாதன் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டுக்குள் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தடுப்பு மருந்தாவது பயன்படுத்தப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் தடுப்பு மருந்துகள் குறைவான அளவிலேயே தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். 10க்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டச் சோதனையை எட்டியுள்ளன.

முறையான ஒப்புதல் கிடைத்த பின்னர், தடுப்பு மருந்து விநியோகம் தொடர்பான வழிகாட்டிக் குறிப்புகளை உலக சுகாதார அமைப்பு வெளியிடும்.

Fri, 10/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை