செங்கிஸ் கான் கண்காட்சிகளில் செங்கிஸ் கான் பெயருக்கு தடை

பிரான்ஸின் நான்ட், சீனாவின் ஹோஹோட் ஆகிய நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த செங்கிஸ் கான் கண்காட்சி, சீன அரசாங்கத்தின் தணிக்கை முயற்சியை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நான்ட் நகரில் 13ஆம் நூற்றாண்டின் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ் கான் தொடர்பில் இடம்பெறவிருந்த கண்காட்சியை சுமார் 3 ஆண்டுகளுக்கு ஒத்தி வைப்பதாக அந்நகர அருங்காட்சியகம் தெரிவித்தது.

சீனாவின் புதிய தேசிய சரித்திரத்திற்கேற்ப மங்கோலியக் கலாசாரத்தை மாற்றி எழுதுமாறு சீனக் கலாசார மரபுடைமைப் பிரிவு வலியுறுத்தியதாக அது கூறியது. ‘செங்கிஸ் கான்’, ‘பேரரசு’, ‘மொங்கோல்’ ஆகிய வார்த்தைகள் கண்காட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் சீன அதிகாரிகள் கோரியதாக அது குறிப்பிட்டது.

தாங்கள் பின்பற்றும் மனிதம், அறிவியல், அறநெறிகள் ஆகியவற்றின் அடிப்படையில், கண்காட்சியை நிறுத்த முடிவெடுத்ததாக அருங்காட்சியக பணிப்பாளர் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய, அமெரிக்கத் தொகுப்புகளைக் கொண்டு புதிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ய மூன்றாண்டு அவகாசம் போதுமானது என்று அது சுட்டிக்காட்டியது. இதற்கிடையே, சீனாவில் மங்கோலியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், உள்ளுர் மொழிக்குப் பதில் சீன மொழியில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற கொள்கைக்கு எதிராக சில வாரங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

Fri, 10/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை