இடைவிடாது பறந்து புதிய சாதனை படைத்த பறவை

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திலிருந்து நியூஸிலாந்து வரை 11 நாட்கள் நிற்காமல் பறந்து பட்டைவால் மூக்கன் பறவை உலக சாதனைப் படைத்துள்ளது.

அத்தகைய பறவைகளின் இயங்குமுறை ஒரு போர் விமானத்திற்குச் சமம் எனக் கூறப்படுகிறது. அது பயணம் செய்த தூரம் சுமார் 12,000 கிலோ மீற்றர்களாகும்.

கடந்த மாதம் 16ஆம் திகதி அலாஸ்காவிலிருந்து ஆரம்பித்த பறவையின் பயணம் 11 நாட்களுக்குப் பின்னர் ஒக்லந்தில் நிறைவுபெற்றது. அந்த ஆண் பறவையின் இடது காலில் ஒரு துணைக்கோள அடையாளக் குறியை விஞ்ஞானிகள் பொருத்தி இந்தப் பயணம் கண்காணிக்கப்பட்டுள்ளது.

பயணத்திற்கு முன், பட்டைவால் மூக்கன் வகைப் பறவைகளின் உடல் அளவு இரட்டிப்பாகும். ஆனால், எடையைக் குறைப்பதற்காகப் பறவையால் தன் உள் உறுப்புகளைச் சுருக்கிக்கொள்ள முடியும்.

முன்னர், 2007இல் ஒரு பறவை எங்கும் நிற்காமல் 11,680 கிலோமீற்றர் தூரம் பறந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறு, நெடுந்தூரம் பறக்கும்போது பறவைகள் தூங்குவதில்லை என்று தெரிகிறது.

Fri, 10/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை