குர்ஆனை அவமதித்ததாக ஒருவர் பங்களாதேஷில் அடித்து கொலை

முஸ்லிம்களின் புனித புத்தகத்தை இழிவுபடுத்தியதாக குற்றங்கூறி பங்களாதேஷ் நகரொன்றில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் ஒருவரை அடித்துக் கொன்றுள்ளனர்.

புரிமாரி என்ற நகரின் பிரதான பள்ளிவாசலில் குர்ஆனை மிதித்ததாக குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவரை அந்தக் கூட்டம் பொலிஸாரின் தடுப்புக்காவலில் இருந்து கைப்பற்றியுள்ளனர்.

“அவர்கள் அதில் ஒருவரை அடித்துக் கொன்று அவரது உடலுக்கு தீமூட்டினர்” என்று மாவட்ட தலைமை பொலிஸ் அதிகாரி ஆபிதா சுல்தானா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசலுக்குள் கடும்போக்காளர்கள் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி அங்கு சோதனை நடத்திய இருவரே குர்ஆனை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

எனினும் கொல்லப்பட்ட அந்த 35 வயது நபர் அண்மையில் தனது தொழிலை இழந்ததை அடுத்து மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று தெரியவந்துள்ளது.

வதந்திகள் மற்றும் சூனிய குற்றச்சாட்டுகளில் இவ்வாறான வன்முறைகள் பங்களாதேஷில் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த 2019இல் கும்பல்களின் தாக்குதல்களில் 50க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமை கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Sat, 10/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை