செனகல் கடலில் படகு மூழ்கி 140 பேர் மாயம்

ஐரோப்பாவை நோக்கி பயணித்த படகு ஒன்று செனகல் கடலுக்கு அப்பால் விபத்துக்கு உள்ளாகி குறைந்தது 140 பேர் மூழ்கி இருப்பதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்த ஆண்டில் இடம்பெற்ற மோசமான படகு விபத்து என்று அது குறிப்பிட்டுள்ளது.

தலைநகர் டக்காரில் இருந்து தெற்காக 100 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் மீன்பிடி நகரான ம்பவுரில் இருந்து புறப்பட்டு சில மணி நேரத்திலேயே சுமார் 200 பயணிகளை ஏற்றிச் சென்ற இந்தப் படகு கடந்த சனிக்கிழமை தீப்பிடித்து மூழ்கியுள்ளது என்று அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

செனகல் மற்றும் ஸ்பெயின் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் சுமார் 60 பேரை காப்பாற்றியபோதும் குறைந்தது 140 பேர் மூழ்கியிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு ஆபிரிக்காவில் இருந்து கெனாரி தீவுகளை நேக்கிய ஆபத்தான கடற்பயணம் வறுமையில் இருந்து தப்பும் தஞ்சக் கோரிக்கையாளர்களின் பிரதான பாதையாக உள்ளது.

Sat, 10/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை