தடையை மீறி தாய்லாந்தில் 3ஆவது நாளாகவும் பேரணி

ஒன்றுகூடல்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையையும் மீறி தாய்லாந்துத் தலைநகர் பாங்கொக்கில் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் பேரணி நடத்தியுள்ளனர்.

பொது போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டபோதும் நகரின் மூன்று வெவ்வேறு இடங்களில் இவர்கள் ஒன்று திரண்டனர்.

பிரதமரை பதவி விலகுவதற்கும் மன்னருக்கான மிதமிஞ்சிய அதிகாரங்களை சீர்திருத்துவதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டது தொடர்பில் பலரும் கோபத்தை வெளியிட்டனர். எனினும் கடந்த சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டங்களின்போதும் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை விட்டும் விலகியே இருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இம்முறை மாறுபட்ட உத்திகளைக் கையாள்கின்றனர். அமைதியான முறையிலும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவும் அவர்கள் கலைந்துசென்றனர். கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர்கள் பேரணி நடத்தினர்.

அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதில் இப்போது கவனம் செலுத்தப்படுகிறது. பிரதமர் பிராயுத் சான் ஓசா வரும் நாட்களில் ஆர்ப்பாட்டங்களைத் தடுத்துநிறுத்த இராணுவத்தினரைப் பணியில் ஈடுபடுத்தும் சாத்தியமும் உள்ளது.

Mon, 10/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை