நியூசிலாந்துத் தேர்தலில் ஆர்டர்ன் அமோக வெற்றி

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் பிரதமர் ஜெசின்டா ஆர்டர்ன் அமோக வெற்றியீட்டியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டிருக்கும் நிலையில் ஆர்டர்னின் மைய வலதுசாரி தொழிலாளர் கட்சி 49.1 வீத வாக்குகளை வென்று 120 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 64 இடங்களை கைப்பற்றியுள்ளார். நியூசிலாந்தில் 1996 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் முறையை அடுத்து இதுவரை காலத்தில் எந்த ஒரு கட்சியும் வெளிப்படையான பெரும்பான்மையை வென்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சியான மைய வலதுசாரி தேசிய கட்சி 26.8 வீத வாக்குகளுடன் 35 இடங்களை கைப்பற்றியுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெறவிருந்த இந்தத் தேர்தல் கொரோனா தொற்றுக் காரணமாக ஒரு மாதம் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற கிரைஸ்சேர்ச் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் மற்றும் நாட்டில் கொரோனா தொற்றை கையாண்டது தொடர்பில் 40 வயதான ஆர்டர்ன் மீது மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது.

Mon, 10/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை