Header Ads

ஈரான் மீதான ஐ.நாவின் ஆயுதத்தடை காலாவதி

அமெரிக்காவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஈரான் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதத் தடை நேற்று காலாவதியானது. எனினும் தமது பாதுகாப்பில் தன்னப்பிக்கை பெற்றிருப்பதாகவும் வேறு நாடுகளில் இருந்து ஆயுதம் வாங்க வேண்டிய தேவை இல்லை என்றும் ஈரான் கூறியுள்ளது.

2007 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த ஆயுதத் தடை 2015 உலக வல்லரசு நாடுகளுடன் ஈரான் செய்துகொண்ட அணு விவகாரம் தொடர்பான உடன்படிக்கைக்கு அமையவே காலாவதியாகியுள்ளது.

எனினும் இந்த உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா தன்னிச்சையாக விலகியது தொடக்கம் இந்த ஆயுதத் தடையை நீக்குவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஈரான் மீதான ஆயுதத் தடையை நீட்டிக்க வேண்டும் என்று அமெரிக்கா பரிந்துரைத்தது. ஆனால் சபை அதனை நிராகரித்தது.

சர்வதேச தடைகள், ஆயுத விற்பனைத் தடை ஆகியவற்றுக்கிடையே, ஈரான் உள்நாட்டு ஆயுத உற்பத்தியைப் பெரிய அளவில் விரிவுபடுத்தியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Mon, 10/19/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.