நடைமுறை தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி புதிய பாடவிதானங்கள் அவசியம்

கல்வி மறுசீரமைப்பின் அவசியத்தை தெளிவுபடுத்திய ஜனாதிபதி

எதிர்கால உலகிற்கு ஏற்ற பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பங்களிக்கக் கூடிய பிரஜையை உருவாக்குகின்ற கல்வி மறுசீரமைப்பின் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெளிவுபடுத்தியுள்ளார்.

பல்கலைக்கழகங்கள், பட்டங்களை வழங்கக்கூடிய நிறுவனங்களாக மட்டுமல்லாமல் நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் அதேபோல் பட்டம் பெறுவோரும் அதன்மூலம் பயனை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

நடைமுறை தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி, புதிய பாடவிதானங்களை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு அவர் கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக (24) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

Sat, 09/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை