சந்நிதியில் நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

கொரோனா மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கட்டளை

திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு இன்று தொண்டமானாறு செல்வச் சந்நிதியில் முன்னெடுக்கத் திட்டமிட்ட அடையாள உணாவிரதப் போராட்டத்துக்கு தடை உத்தரவு விதித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கொரோனா சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வல்வெட்டித்துறை பொலிசாரால் இந்த தடை உத்தரவு விண்ணப்பம் நேற்று முற்பகல் தாக்கல் செய்யப்பட்டது.

தியாக தீபம் நினைவேந்தலை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு நேற்றுமுன்தினம் நீடிக்கப்பட்ட நிலையில் ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்றுமுன்தினம் கூடி இன்று தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நடத்த தீர்மானித்தனர். அதற்குத் தடை கோரி வல்வெட்டித்துறை பொலிசாரால் விண்ணப்பிக்கப்பட்ட வழக்கிலேயே பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றால் இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

நாகர் கோவில் விசேட நிருபர்

Sat, 09/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை