துப்பாக்கியை கைவிட்ட பொலிஸார் இடைநீக்கம்

விமானத்தில் துப்பாக்கியை விட்டுச்சென்ற பிரிட்டிஷ் பொலிஸ் அதிகாரி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டோமினிக் ரொப்பின் பாதுகாவலர் குழுவில் அவர் இருந்துவந்தார். அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமைச்சருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரி, மீண்டும் லண்டன் திரும்பியபோது விமானத்தில் துப்பாக்கியை விட்டுச்சென்றார்.

சம்பவத்தை பிரிட்டனின் மெட்ரோபொலிடன் காவல்துறை கடுமையாகக் கருதுவதாகவும் விசாரணை நடக்கும் வேளையில் அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

ரொப் அமெரிக்காவில் அந்நாட்டு இராஜாங்கச் செயலாளர் மைக் போம்பியோவைச் சந்தித்தார்.

இவ்வாண்டின் ஆரம்பித்தில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரனின் பாதுகாவலரும் துப்பாக்கியுடன், முன்னாள் பிரதமரின் கடவுச்சீட்டையும் விமானக் கழிப்பறையில் விட்டுச்சென்றார்.

Tue, 09/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை