ருமேனியாவில் திருடப்பட்ட மிக அரிய புத்தங்கள் மீட்பு

வட கிழக்கு ருமேனியாவிலுள்ள கிராமப்புற வீடு ஒன்றின் தரைக்கு அடியில் சுமார் 4.4 மில்லியன் டொலர் மதிப்புள்ள திருடப்பட்ட புத்தகங்கள் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஐசக் நியூட்டன், கலிலியோ போன்ற விஞ்ஞானிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய அரிய முதல் பதிப்புப் புத்தகங்களும் கண்டெடுக்கப்பட்டன.

லண்டனிலுள்ள புத்தகக் கிடங்கு ஒன்றிலிருந்து 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருடர்களால் அந்தப் புத்தகங்கள் திருடப்பட்டன. திருடர்கள் கிடங்கின் கூரையில் துவாரங்களை வெட்டி அதனுள் நுழைந்தனர்.

அந்தத் திருடர் கும்பல் லண்டனில் பல பெரிய திருட்டுச் சம்பவங்களின் பின்னணியில் உள்ளதாக லண்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விலை மதிப்பற்ற அந்த அரிய புத்தகங்கள் கலாசார வரலாற்றின் ஒரு முக்கிய அம்சமாக அமைகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ருமேனியத் திருடர் கும்பல்கள் பிரிட்டனுக்கு அவற்றின் உறுப்பினர்களை அனுப்பி அம்மாதிரியான குற்றங்களைப் புரிய வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன என்று பொலிஸார் கூறினர்.

Tue, 09/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை