20ஆவது திருத்தம்: பிரதமரின் குழுவின் அறிக்கை இன்று

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அபிப்பிராயங்கள் இன்று (15) ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளன.

அத்தோடு, குறித்த குழுவின் அறிக்கை நாளையதினம் (16) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் குழுவொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவில் அமைச்சரவை அமைச்சர்கள், அரசாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 9 பேர் உள்ளடங்குகின்றனர்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த குழு நேற்று (14) மாலை கூடியமை குறிப்பிடத்தக்கது. 

Tue, 09/15/2020 - 09:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை