உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழு; முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் வீட்டிற்கு சென்று சாட்சியம் பதிவு

ஏப்ரல் 21உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  விஜயராமயில் உள்ள அவரின்  இல்லத்தில் வைத்து  நேற்று அவரிடம் சாட்சியம் பதிவு செய்துள்ளனர்.

ஏப்ரல் 21பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்தது.

முன்னாள் அமைச்சர்களும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும் இதற்கு முன்னர் ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியம் வழங்கியுள்ளதோடு சாட்சி விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவிக்கு வந்தவுடன் இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.

முன்னாள் பிரதமர் உட்பட நல்லாட்சி அரசில் இருந்த அமைச்சர்கள் பலரும் சாட்சியமளிக்க உள்ளனர்.

Thu, 08/27/2020 - 08:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை