Header Ads

ஐ.தே.கவுடன் இணைந்து பணியாற்ற நிபந்தனைகள்

கண்டியில் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு

எமது இரண்டு நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சி நிபந்தனைகள் ஏதும் இல்லாமல் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கப்படுவதே ஒரு நிபந்தனையாகும். மேலும் மாறுபட்ட அரசியல் கருத்துக்களை கொண்டவர்கள் அனைவரையும் ஓரணியில் ஒன்றிணைக்க முடியும்.

அத்தோடு புதிய தலைவர் நியமிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது மற்ற நிபந்தனையாகும். ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்க அதிக காலம் தேவைப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சி பொதுமக்கள் அனுப்பிய செய்தியைப் புரிந்துகொண்டு பிரசாரத்தை வலுப்படுத்த ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க வேண்டும். 

இதேவேளை பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்த குற்றச்சாட்டில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சுமார் 60பேர் தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தேவையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது. இது ஒரு பாரிய குறைபாடு.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே அடிமட்ட அரசியல்வாதிகள் இவ்வாறு செயற்பட்டனர் என்றார்.

Thu, 08/27/2020 - 08:41


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.