10 ஆண்டுகளுக்குப் பின்னர் நுவரெலியா இ.தொ.கா.வசம்

பொதுஜன பெரமுனவுக்கு 05 ஆசனங்கள்

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளில் இரண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. 

கொத்மலை, ஹங்குராங் ​ெகத்த ஆகிய தொகுதிகளிலேயே மொட்டு கட்சி முன்னிலை வகிக்கின்றது. 

2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நுவரெலியாவை இ.தொ.கா. அங்கம் வகிக்கும் அணி கைப்பற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.  2015 பொதுத்தேர்தல், 2019 ஜனாதிபதி தேர்தல்களில் நுவரெலியாவில் இ.தொ.கா. அங்கம் வகிக்கும் அணி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. இம்முறை பொதுத் தேர்தலில் ஜீவன் தொண்டமான் தலைமையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி நுவரெலியா மாவட்டத்தில் 05 ஆசனங்களைக் கைப்பற்றியுள்தென தெரியவருகின்றது.  அத்துடன், ஐக்கிய மக்கள் சக்திக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனம் கூட கிடைக்கவில்லை. சுயேச்சையாக போட்டியிட்ட அனுசா சந்திரசேகரனும் தெரிவாவதற்கான வாக்குகளைப் பெற்றிருக்கவில்லை. 

விருப்பு வாக்குப்பட்டியலில் ஜீவன் தொண்டமான் முன்னிலை வகிக்கின்றார்.

Fri, 08/07/2020 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை